புதிய த்ரில்லர் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை..
இதனை ஜிஎஸ் விக்னேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
இந்தப் படத்துக்கு நயன்தாராவின் மாயா உள்பட சில படங்களுக்கு இசையமைத்த ரான் ஈதன் யோஹன் இசையமைக்க, தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னையில் சில வாரங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்திவிட்டு, இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு கோயம்புத்தூர் செல்லவுள்ளனர்.