நிவேதா தாமஸ்க்கு அம்மாவாகிறாரா நயன்….?

Must read

ஏ.ஆர்.முருகதாஸின் தலைவா 167 படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

போலீஸ் வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்துக்கு மகளாக நிவேதா தாமஸ் இப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நிவேதா தாமஸ்க்கு அம்மாவாக நடிக்கப் போகிறாராம் நயன்தாரா. இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. 23 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க நயன் சம்மதித்தது ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியிருப்பதாக வெளியான தகவல் வெறூம் வதந்தி என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

More articles

Latest article