விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டையில் நடைபெறும் அகழாய்வில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுக்கப்பட்டுப்ள்ளது.

தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறன.

இங்கு ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இதில் இன்றைய அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு,

”இந்த நாணயம் கி. பி. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது. இக்காசின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இக் காசில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுகிறது,”

எனப் பதிவிட்டுள்ளார்.