ராய்ப்பூர்:

த்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிள், 3 கான்ஸ்டபிள் உள்பட 26 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக  பா.ஜ.,வைச் சேர்ந்த ராமண் சிங் முதல்வராக உள்ளார். இங்கு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிகுந்துள்ளது.   சுக்மா மாவட்டப் பகுதியில் நக்சலைட்டுகளின் கோட்டை.

இநத பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது  நேற்று பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் வந்த நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

எதிர்பாராத சமயத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நிலைகுலைந்தனர். நக்சலைட்டுகளின் சரமாரி தாக்குதலால், 26 வீரர்கள் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இந்த திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.  இந்த தாக்கு தலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் மட்டுமமே மரணடைந்தனர் என்று செய்தி வெளியான நிலையில், சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் பலியான வீரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் படம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலியானது உறுதியாகிறது.

இந்த  தாக்குதல் குறித்து போலீஸ் உயரதிகாரி, சுந்தர்ராஜ் கூறுகையில், ”சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ”சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க, தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்றார்.