சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சில கோவில்களில் 11 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடன் போர் புரிந்து வீழ்த்தினாள். இவ்வாறு சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த விழாவே நவராத்திரி மகோற்சவம்.
*நவராத்திரி, உத்தரபிரதேசத்தில் “ராம்லீலா’ என்ற பெயரிலும் வங்காளிகள் “காளிபூஜை’, “துர்க்கா பூஜை’ என்றும் கர்நாடகத்தில் “தசரா பூஜை’ என்றும் கொண்டாடுகின்றனர்.
*தில்லியில் விஜயதசமி அன்று ராவணன் பொம்மைகளை எரித்து ராவணன் சம்காரமாக கொண்டாடுகின்றனர்.
*நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் துர்க்கா; அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி; கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி பூஜையாகவும் பத்தாம் நாள் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
*விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.
kolu
நவராத்திரி விரதம் 9 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.
முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி, வணங்குவதே இந்த நாளின் சிறப்பாகும்.
வீடுகளில் 9 நாட்களும் கொலு வைத்தும் பக்தர்கள் சிறப்பிப்பார்கள். நவராத்திரி நாளான 9 இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தி’யான அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த விழாவின் புராண வரலாறு.
இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை 9 அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.
புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டை தொடங்க வேண்டும்.அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது.
கொலுவை முறையாக ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் 9 படிகளில் பொம்மைகளை வைக்க வேண்டும். கொலுவுக்கு வரும் பக்தர்களுக்கு மங்களப் பொருட்களான மஞ்சள் குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.
சென்னை கோயில்களில் பூஜை
navarathei
காளிகாம்பாள் கோவில்
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இன்று நவராத்திரி விழா தொடங்குகிறது. இந்த விழாவில் 3 நாட்கள் வீதம் காளிகாம்பாள் முறையே துர்கா பரமேஸ்வரியாகவும், மகாலட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் கொலுவிருந்து காட்சி தருகிறாள். ஒவ்வொரு நாளும் காளிகாம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையுடன் நவராத்திரி உற்சவம் நடைபெறும். 11-ந் தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகளும், இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
முதல் நாளில் திரிபுரசுந்தரி அலங்காரம், 2-வது நாளில் காமாட்சி அலங்காரம், 3-வது நாளில் மீனாட்சி அலங்காரம், 4-வது நாளில் மகாலட்சுமி அலங்காரம், 5-வது நாளில் விசாலாட்சி அலங்காரம், 6-வது நாளில் காளிகாம்பாள் அலங்காரம், 7-வது நாளில் அன்னபூரணி அலங்காரம், 8-வது நாளில் அசுவாஹினி அலங்காரம். 9-வது நாளில் சரஸ்வதி அலங்காரம், 10-வது நாளில் மகா துர்கா அலங்காரமும் செய்யப்படுகிறது.
மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நவராத்திரியையொட்டி 11-ந் தேதி வரை விழா கொண்டாடப்படுகிறது. தினமும் அம்மனுக்கு பூஜையும், அபிஷேக, ஆராதனையும் நடக்கிறது. நவராத்திரி விரதம் விரதம் இன்று 01ம் தேதி தொடக்கம் 10ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படும்.
பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும் செய்யப்படுகின்றது. சரஸ்வதிக்குரிய நாள் மூல நட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுபெறுகின்றது.
நவராத்திரி பூஜை தொடக்கம்:
புரட்டாசி 15 – அக்டோபர் 1 சனிக்கிழமை காலை 06-00 முதல் 09-00 வரை பகல் 10-30 முதல் 01-30 வரை
ஆயுத பூஜை – சரஸ்வதி சாமி கும்பிட நல்ல நேரம்: அக்டோபர் 10 திங்கள் கிழமை பகல் 12-00 முதல் 02-00 வரை மாலை் 06-00 முதல் 09-00 வரை
விஜய தசமி சாமி கும்பிட நல்ல நேரம் : அக்டோபர் 11 செவ்வாய் பகல் 10-30 முதல் 11-00 வரை பகல் 12-00 முதல் 01-00 வரை
வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு நல்ல நேரம் : அக்டோபர் 16 ஞாயிறு 08-00 முதல் 09-00 வரை அக்டோபர் 21 வெள்ளி 06-00 முதல் 07-00 வரை
வீடு வாங்குவதற்கு, கிரக பிரவேசம் செய்வதற்கு தொழில் துவங்குவதற்கு அக்டோபர் 03 திங்கள் 09-30 முதல் 10-30 வரை அக்டோபர் 05 புதன் 09-00 முதல் 10-00 வரை அக்டோபர் 06 வியாழன் 09-00 முதல் 10-00 வரை அக்டோபர் 19 புதன் 05-00 முதல் 06-00 வரை அக்டோபர் 28 வெள்ளி 04-00 முதல் 05-00 வரை.