விழுப்புரம்:
ன்னை காதலிக்கவில்லை என்பதால், மாணவி நவீனாவை தீ வைத்து கொளுத்திய செந்திலுக்கு  வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க அறிவித்து உள்ளது.

நவீனா
நவீனா

விழுப்புரம் அருகே உள்ள வ.பாளையத்தை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். அதே பகுதியை சேர்ந்த நவினா என்ற பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், மாணவி நவீனா, தனக்கு  காதலிக்க பிடிக்கவில்லை என்றும், தான் படிக்க வேண்டும் என்றும் கூறி, அவரது காதலை நிராகரித்து உள்ளார்.
இதன் காரணமாக, . கடந்த 30ந்தேதி, செந்தில் தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு, தன்னை காதலிக்க மறுத்த நவீனா என்றை மாணவியையும் கட்டிப்பிடித்து கொண்டார்.  இந்த தீ வைப்பு சம்பவத்தில், அந்த இடத்திலேயே செந்தில்  உடல் கருகி  உயிரிழந்தார்.  மாணவி நவீனா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு கடந்த 3ந்தேதி உயிரிழந்தார்.
இறந்த மாணவியின் உடலுக்கு பாமக முன்னாள் எம்எல்ஏ குரு, பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் 35 ஆயிரம் நிதி உதவி வழங்கினர்.
இரங்கல் நிகழ்ச்சியில் பா.ம.க. குரு பேசும்போது,  பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. படிக்க வேண்டிய வயதில் தொந்தரவு செய்ததால் நவீனா படிப்பை தொடர முடியாமல் போனது. அதுமட்டுமல்லாமல் இப்போது உயிரே போயிருக்கிறது.
குரு, பாலு
பா.ம.க. குரு,  பா.ம.க வழக்கறிஞர் பாலு

நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லுகிறோம் நாடகக் காதல் என்று. இல்லை என்று மறுத்து சில அமைப்புகளும், சில தலைவர்களும் கூறி வந்தனர். இப்போது என்ன பதில் சொல்வார்கள். இனி என்ன ஆறுதல் கூறினாலும் மாணவி நவீனா திரும்பி வருவாரா என கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் பாலு பேசுகையில், இதனை நாங்கள் சும்மா விடப்போவதில்லை.  நவினா சாவுக்கு காரணமாக செந்திலுக்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. சுருளிராஜனிடம் மனு அளிக்க உள்ளோம்.
தன்னை விரும்பாத பெண்ணையும் விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் தொடங்கி, கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்கு காரணமானவர்கள்தான். இவர்கள் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் போகிறோம் என்றார்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் தடுக்க நவீனா கொலையின் பின்னணியில் உள்ள அனைவர்மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதுடன்,
நவீனா உயிர்நீத்த ஆகஸ்ட் 3 ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாக தெரிவித்தார்.