புவனேஸ்வர்:
ஒடிசாவின் 5-வது முறையாக மே 29-ம் தேதி நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்கிறார்.
ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டப் பேரவை தொகுதிகளில், 112 தொகுதிகளில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றது.
23 தொகுதிகளை பெற்று பாஜக எதிர்கட்சியானது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பிஜு ஜனதா தளத்துக்கு 44.7% வாக்குகளும், பாஜகவுக்கு 32.5% வாக்குகளும் காங்கிரஸுக்கு 16.12% வாக்குகளும் கிடைத்தன.
கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஒடிசா முதல்வராக இருக்கும் பிஜு பட்நாயக், தற்போது 5 முறையாக மே 29-ம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.