அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை – சோனியா காந்தி

Must read

புதுடெல்லி:
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதை எதிர்கொள்வதற்கு கட்சியை தயார்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது.

இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல், நாடு தழுவிய பாரத யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட சோனியா காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த யாத்திரை நடைபெறும் என்றார்.

More articles

Latest article