டில்லி:

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்றும், நதிகள், அணைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

நாடு முழுவதும் பல்வேறு நதிநீர் பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் காவிரி நதி நீர் பிரச்சினை, கர்நாடகாவில் மகதாயி நதிநீர் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மாநிலங்களுக்கு இடையே சுமூக உறவின்மை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில,   மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தி ருந்தார்.

அதில், நநி நீர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நதிகளை, அணைகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து ஒரே வாரியமாக அமைத்து நிர்வகிக்க கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், நாட்டில் எங்கோ நடக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

இது போன்ற உத்தரவானது சாத்திய படாத ஒன்று என்றும், நதிகள் இணைப்பது என்பது அவளவு சுலபம் இல்லை என்றும் இது போன்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்து பொதுநல வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.