டெல்லி:

தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுக்கும் பணிகள்  ஏப்ரல் 1ந்தேதி தொடங்குகிறது. இதை  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்

2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேடான   தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.) பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பும் இருந்தும், என்பிஆர் கணக்கெடுக்கும்பணி  பணிகள் வரும் ஏப்ரல் மாதம்  1-ந் தேதி முதல் தொடங்கப்படும் என ஏற்கனவே ம அறிவித்துள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 1ந்தேதி மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுக்கும் பணியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  தொடங்கி வைக்கிறார். மக்கள்தொகை பதிவேட்டில் முதல் நபராக தனது பெயரை பதிவு செய்கிறார்.

இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு, பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) உள்பட  அரசால் அங்கீகரிக்கப்பட்ட 21 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை குடும்ப தலைவர் காட்டி பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.