டெல்லி
தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 18 ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் சட்டவிரோத விஷ சாராயம் குடித்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.
மருத்துவர்கள் சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த விஷச்சாராய வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.