டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று அஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர்  நாடாளுமன்றத்தில் இருந்து ஊர்வலமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலவலகம் இருக்கும் அக்பர் சாலைக்கு சென்றனர். இதற்கிடையில் டெல்லியில் மகளிர் காங்கிரஸ் உள்பட பல பகுதிகளில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்க இயக்குனரகம் விசாரித்ததைக் கண்டித்து, மத்திய அரசைக் கண்டித்து நாடாளு மன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், மக்களவை அமளிதுமளிப்பட்டது.

இதையடுத்து கோபமாக பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா? காங்கிரஸ் தலைவர் (சோனியா காந்தி) ஒரு சூப்பர் மனிதரா? அவர்கள் (காங்கிரஸ்) தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்…”: என்று தெரிவித்தார்.

இதனால் மேலும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள் பார்லிமென்டில் இருந்து, அக்பர் ரோடு 24ல் அமைந்துள்ள கட்சி தலைமையகத்திற்கு சென்றனர்.

டெல்லியில் ஆங்காங்கே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் அலுவலகம் முன்பு மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.