லக்னோ:

தாஜ்மகாலை சுற்றி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள், விடுதிகளை இடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ராஜ்மகால் அமைந்துள்ள பகுதி,  பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், அங்கு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள தனியார் உணவகங்கள், விடுதிகள், கட்டிடங்களை  அகற்ற வேண்டும் என்றும், அந்த இடங்களில் அதிக மரக்கன்றுகளை நடவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தாஜ்மகாலை சுற்றி 100 மீட்டர்களுக்ளுள்,  விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த 166 கட்டி டங்களை இடிக்க இந்திய தொல்பொருளியல் ஆய்வு துறை கடந்த 2010ம் ஆண்டே நோட்டீஸ் கொடுத்திருந்தது.

ஆனால், இதற்கு தடை கேட்டு கேட்டு கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதன் காரணமாக இடிப்பது தடைபட்டு வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பாயம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

அதில், அனுமதியின்றி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிங்களை இடித்து தள்ள அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த  அதிரடி தீர்ப்பு உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.