சென்னை: தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,  உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமை என தெரிவித்து உள்ளார்.

“உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத் துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்” என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 5-வது பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 23-ம் தேதியை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது .விவசாயம் மற்றும் விசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி விவசாயிகளின் பாதுகாவலராக விளங்கியவர் சவுத்ரி சரண் சிங். அவரை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றப்படுகிறது.

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் போட்டுள்ளார். அதில்,  உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர் களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம் உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்! என்று தெரிவித்துள்ளார்.