ஈரோடு
தேசிய ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் தினம் ரூ. 5 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுவதால் 30000 விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் ஜவுளி உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு சுமார் 30000 விசைத்தறிக்ல் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினசரி ரூ.5 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி ஆவது வழக்கமாகும். சுமார் 2 கோடி மீட்டர் ரேயான் துணிகள் இங்கு தயார் ஆகின்றன.
இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30000 பேர் உள்ளனர். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கால் இந்த விசைத்தறி தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அத்துடன் இங்குள்ள சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் இந்த விசைத்தறி தொழிலை நம்பி உள்ளனர்.
தற்போது இவர்கள் அனைவரும் கடும் பாதிப்பு அடைந்துள்ளதால் அவர்கள் மின் கட்டண சலுகை, வங்கிக்கடனுக்கான வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகளை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அறிவிப்பதன் மூலம் மட்டுமே தேசிய ஊரடங்கு முடிந்த பிறகு தங்கள் தொழிலை மீண்டும் நடத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
[youtube-feed feed=1]