சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடக்கத்தின்போது தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவித்ததால், ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார்.
கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. சரியாக 9.20 மணிக்கு உள்ளே வந்தவர் அடுத்த 15 நிமிடத்தில் வெளியேறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக காலை 9.30 மணிக்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு வருகை தந்தை ஆளுனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.
2026-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆளுனர், முதல்வர், எதிர்கட்சித்தலைவர் என அனைவரும் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். அவைக்குவந்த ஆளுநரை சபாநாயகர் மற்றும் அவை முன்னவர் வரவேற்றார். அவைக்குள் ஆளுநர் வந்ததும், தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் தரப்பில் தேசிய கீதம் பாட வலியுறுத்தப்பட்டது.
தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்
[youtube-feed feed=1]