நாதுரான் கோட்ஸேயின் 109 – வது பிறந்த தினம் கொண்டாடிய இந்து மகா சபையினர்: மீண்டும் பிறக்க பிரார்த்தனை

Must read

ஆக்ரா:

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுரான் கோட்ஸேயின் 109-வது பிறந்தநாள் விழாவை, அலிகாரில் இந்து மகா சபையினர் கொண்டாடினர்.


இது குறித்து இந்து மகா சபை செய்தி தொடர்பாளர் அசோக் பாண்டே கூறும்போது, நாதுரான் கோட்ஸே தேச பக்தி மிக்கவர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா கூறியது சரியே.

அரசியல் நிர்பந்தம் காரணமாக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். தேர்தல் ஆதாயம் பெறும் நோக்கில், பல்வேறு அரசியல் கட்சிகள் கோட்ஸே மீது அவதூறு பரப்புகின்றனர்.

கோட்ஸேவை தீவிரவாதி என்று சொல்பவர்கள் எல்லாம் உண்மையிலேயே அரசியல் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

நாதுரான் கோட்ஸே இந்த மண்ணில் மீண்டும் பிறக்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

அப்போது தான் காந்தி போன்று நாட்டைத் துண்டாட நினைப்போரை கொல்ல முடியும். கோட்ஸேதான் உண்மையான தேச பக்தர். அவர் தீவிரவாதி இல்லை என்றார்.

 

More articles

Latest article