சென்னை,
நகை சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்துள்ளதாக நாதெள்ள நகை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு நீதிமன்றம் மூலம் முதலீட்டார்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்படும் என போலீசார் தெரிவித்த் உள்ளனர்.
பாரம்பரியமிக்க நாதெள்ள சம்பத்து செட்டி நிறுவனத்துக்கு சொந்தமான நகைக்கடை தமிழகத்தில் பல இடங்க ளில் நடைபெற்று வந்தது. தற்போதைய வியாபாரி போட்டி மற்றும் இயக்குனர்களின் தவறான நடவடிககை காரணமாக இந்த கடைகள் நஷ்டத்தில் இயங்கியதால், கடையை தொடர்ந்து நடத்த முடியாமல் ஒவ்வொன்றாக மூடினர்.
இந்த நகைகக்கடைகளில் ஏராளமான பொதுமக்கள் மாதாந்திர சீட்டுக்கள் மூலம் பணம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒவ்வொரு நகைக்கடையாக மூடப்பட்டது.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் கட்டிய பணம் என்னானது என அந்த கடையை முற்றுகையிட்டனர். பின்னர், நகைக்கடை உரிமையாளர்கள் கொடுத்த உத்தரவாதத்தின்படி பணம் கட்டியவர்கள் சமாதானமாகினர்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளும் திடீரென மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த கடைகளில் சீட்டுக்கட்டிய வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
சீட்டு முடிந்தும் கட்டிய பணத்துக்கு நகை வழங்காமல் கடையை மூடிவிட்டதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நகைக்கடை மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்பபெற்றுத் தரக்கோரி பாதிக்கப்பட்டோர் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
அதையடுத்து போலீசார் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபலமான நாதெள்ள நகைக்கடையில் 21ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகைச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 75 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்ததுள்ளது.
இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சுமார் 1000பேர் வரைதான் அந்த நிறுவனத்தின்மீது புகார் கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.
நாதெள்ளா சம்பத்து செட்டி நகைக்கடைக்கு 5 இயக்குனர்கள் உள்ளனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருடன், ரங்கநாத குப்தா, அவரது மகன்கள் பிரபன்னா குமார் மற்றும் பிரசன்னா குமார் மற்றும் அவர்களது உறவினர் கோட்டா சுரேஷ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் மீது 1997 ஐபிசி பிரிவு 406 (குற்றவியல் மீறல் நம்பிக்கை) மற்றும் 420 (ஏமாற்றுதல்) மற்றும் தமிழ்நாடு சேமிப்பு வங்கிகளின் நலன்களுக்கான பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்காக, ரங்கநாத குப்தா, அவரது மகன்கள் மற்றும் கோட்டா சுரேஷ் ஆகியோர் வரவழைக்கப்பட்டதாகவும், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி அவர்களிடம் இருந்து பல காசோலைகள் மற்றும், பல கோடி மதிப்புமிக்க சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களின் அனைத்து ஷோரூம்கள் உட்பட பல சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், . கல்பாக்கத்தில் உள்ள இரண்டு வீடுகள், மற்றும் ஏம்பட்டூரில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட பள்ளி ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிமன்றத்தில் மூலம் விற்கப்பட்டு முதலீட்டார்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்றும் கூறி உள்ளனர்.
மேலும், நகைக்கடை உரிமையாளர்களும் சில சொத்துக்களை விற்று, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.