நத்தம்: ‘முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்ல்  நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டார் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் . தேர்தல் காலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது  ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அவர்மீது  வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில்அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் என பலருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதனுக்கு எடுக்கப்பட்ட மாதிரி சோதனையில்,  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.