டெல்லி: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக,  மே 15 ஆம் தேதி வரை தாஜ்மஹால், குதுப்மினார் உள்பட நினைவுச்சின்னங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

கொரோனா  வைரசின் 2வது அலை நாடு முழுவதும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. உருமாறிய வகையில், எந்தவித அறிகுறியும் இன்றி தொற்று பரவி வருவதால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக அளவிலான பாதிப்பு மஹாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து   உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகளவு கொரொனா தொற்றுப் பரவிவருகிறது.

இதைத்தெடர்ந்து அங்கு  மே 15 ஆம் தேதிவரை பள்ளிகள் மூடப்படுவதாகவும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், அம்மாநிலத்தில் இரவு 7 மணியிலிருந்து காலை 8 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அத்துடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டாமல் அவர்களுக்கு ரூ.1000 அபராதமும், இரண்டாவது முறை பிடிபட்டால் அவர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது  டெல்லி அரசு வரும் மே 15 ஆம் தேதிவரை தாஜ்மஹால் , குதுப்மினார் உள்பட பல்வேறு நினைவுச்சின்னங்களை மூட உத்தரவிட்டு உள்ளது.