படிக்கிறப்ப கவனம் சிதறினா… : மெஸேஜ் சொல்லும் "நட்சத்திர ஜன்னலில்…"      

Must read

a
ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். மற்றும் போஸ் வெங்கட்,பாய்ஸ் ராஜன்,ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.              Abishek kumaran -  Anupriya (2)
இயக்குனர் ஜெயமுருகேசன், “ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழை குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்கார குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றார்கள். அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படிகிறார்கள்.  அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அந்த காதல் ஜெயித்ததா…  காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை பள்ளிக்கூட பின்னணியில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.
“படத்தில மெஸேஜ் ஏதும் இல்லையா” என்று கேட்டவுடன், “அது இல்லாமலா… படிக்கிற வயசுல படிக்கணும், அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை இளமை ததும்ப சொல்லி இருக்கிறோம்” என்றார்.
நல்ல மெஸேஜ் சொன்னா, சரிதான்!

More articles

Latest article