நாசாவின் ஜேபிஎல் மையத்தில் டீப் ஸ்பேஸ் நெட்வோர்க் என்பது உலகில் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கிகளின் அறிவியல்தொலை தொடர்பு கட்டமைப்பு அமைந்துள்ள இடம். அதுமட்டுமல்லாமல் விண்வெளி யில் கட்டப்பட்டு வரும் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டு மையமும் இங்கேதான் அமைந்துளளது பாதுகாப்பாக இருக்கவேண்டிய இடத்தில் இணைய ஊடுருவிகள் உள்நுழைந்து 500 எம்பி அளவுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்துள்ளது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
உலகில் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கிகளின் அறிவியல்தொலை தொடர்பு கட்டமைப்பு மற்றும் பன்னாட்டு விண்வெளி ஆய்வுமையத்தின் கட்டுப்பாட்டு மையமும் உள்ள கணினி பிணைப்பில் ஊடுருவ ஊடுருவிகளுக்கு வெறும் 2500 ரூபாய் மதிப்புள்ள ராஸ்பெர்ரி பை என்ற கையடக்கக் கணினி போதுமானதாக இருக்கிறது என்பதுதான் மிகப்பெறும் ஆச்சர்யம்
இந்த ஊடுருவல் சென்றவருடம் ஏப்ரல் மாதம் 2018 ஊடுருவியதாக கூறப்பட்ட கண்டறியப்பட்ட நிலையில் விண்வெளி ஆய்வுமையத்தின் தொடர்புகளை முற்றிலும் அதன் பிணைய தொடர்பினை நிறுத்த முடிவெடுத்ததாகவும் தெரிகிறது
இது குறித்த நாசா வின் விரிவான அறிக்கையில் 2009ம் ஆண்டிலிருந்தே ஜேபிஎல் ஆய்வு மையத்தில் உள்ள கணினிகளை தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது
2009ம் ஆண்டு சீனாவில் உள்ள ஐபி முகவரி உள்ள கணினி மூலம் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் அதில் 22 ஜிபி அளவுள்ள கோப்புகள் திருடப்பட்டதாகவும் , அதன் பின் அதன் கணினி பிணைப்புகள் முழுமையாக பாதுகாப்பாக கட்டமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது
2011ம் ஆண்டிலுமம் இதேபோல் சீன ஐபி முகவரி கொண்ட கணினி மூலம் ஜேபிஎல் மையத்தின் உள்ள கணினி பிணைய பாதுகாப்பினை தகர்த்து அதில் உள்ள 18 மேலாண்மை வழங்கிகளிலும் கோப்புகளை பதிவேற்றம் செய்யவோ, நீக்கவோ முழு அட்மின் கணக்கினையும் பெற்றுள்ளன
அதன்பின் தொடர்ந்து 2014,2016,2017 ,2018ம் ஆண்டிலும் ஜேபிஎல் மையத்தில் உள்ள மேலாண்மை வழங்கிகளிலும் இணைய ஊடுருவிகள் ஊடுருவியுள்ளனர்.
எவ்வளவு பாதுகாப்பகள் இருந்தாலும் அதையும் மீறி உள்நுழையும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களை கொண்டு தொடர்ந்து ஜேபிஎல் மையத்தினை மேலாண்மை வழங்ககளில் உள்நுழைந்து ஊடுருவ முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது
40 பக்கமுள்ள நாசாவின் முழு அறிக்கையின் விபரம்
https://oig.nasa.gov/docs/IG-19-022.pdf
நவீன தொழில்நுட்பம் நாள்தோறும் பெருகிவருவதால் தனியாள் மட்டுமல்ல உலகில் பாதுகாவலனாக விளங்கினாலும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை உணரவேண்டும்
-செல்வமுரளி