வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தும் வகையில், நாசா வடிவமைத்துள்ள ஹெலிகாப்டர், தனது அனைத்துவித பறக்கும் சோதனைகளையும் நிறைவு செய்துள்ளது.
மெல்லிய காற்று மண்டலம் மற்றும் குறைந்த ஈர்ப்பு விசை ஆகியவை நிலவும் சூழலில், பறக்கும் விதத்தில் தயார்செய்யப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டரின் எடை 1.8 கிலோ மட்டுமே.
வரும் 2020ம் ஆண்டில் சிகப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தை நோக்கி, தனது ஆய்வுப் பயணத்தை தொடங்கவுள்ளது இந்த ஹெலிகாப்டர். மிகவும் குளிர்ந்த காலநிலை மற்றும் 90 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்ப நிலைகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த குட்டி ஹெலிகாப்டர்.
வரும் 2020ம் ஆண்டு பூமியிலிருந்து புறப்படும் இந்த வாகனம், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், செவ்வாய் கிரகத்தின் பரப்பில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி