வாஷிங்டன்:

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய்க் கிரகத்தின் மேல் பகுதியில் சுற்றி வெற்றிகரமாக ஒரு பாறையை குடைந்து மண் மாதிரியை சேகரித்துள்ளது.

ஒரு மனிதர் வீட்டு ஒரு சுவரில் துளையிடுவது போல கியூரியாசிட்டி அதன் ரோபோ கவசத்தின் சக்தியை பயன்படுத்தி ஓட்டை போட்டுள்ளது. இதர கிரகங்களிலும் இதே தொழிநுட்பத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. பூமியில் இருந்து 6 கோடி மைல் தொலைவில் 2 அங்குல துளையிட்டு சாதனை படைத்துள்ளது. இது வெற்றிகரமான செயல் என்று நாசா விஞ்ஞாணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.