ளிமண்டலம் ‘டிரோபோஸ்பியர்’, ‘மீசோஸ்பியர்’, ‘எக்ஸ்சோஸ்பியர்’, ‘அயனோஸ்பியர்’ எனும் நான்கு அடுக்குகளால் ஆனது

அந்த அயனோஸ்பியர்  அடுக்கில் நடைபெறும்  விளைவுகளை ஆராய நாசா கடந்த வியாழக்கிழமை இரவு  ஐகான் என்ற பெயருடைய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.

2017 ஆண்டே செலுத்தப்படவேண்டிய இந்த ஐகான் செற்கைக்கோள். இரண்டு ஆண்டு தாமதமாக ஏவப்பட்டது. புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து  இந்த செயற்கைக்கோளை கொண்டிருந்த இராக்கெட்  செலுத்தப்பட்டது,  பின்னர்  ஐந்து விநாடிகள் கழித்து, இணைக்கப்பட்ட பெகாசஸ் ராக்கெட் எரியத் துவங்கி ஐகான் செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பியது.

நமக்கும் விண்வெளிக்குமா எல்லையாக இந்த அயனோஸ்பியர் உள்ளதால் அங்கே நடைபெறும் விண் வௌி பருவநிலை, விண் வெளியில் இருந்து நமக்கு வரும் வெப்பநிலை மற்றும் சில நேரங்களில் விண்வெளியில் இருந்து நமக்கு வரும் வானொலி தொலைதொடர்புகளை சில நேரங்களில் அயனோஸ்பியர் அடுக்கில் வரும்போது தொடர்பு அறுந்துவிடுகிறது. எனவே இவைளை ஆராயவும் இந்த செயற்கை கோள் உதவும்.

செல்வமுரளி