சென்னை,

திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, கட்சி சார்பாக கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி இனனோவா காரை பரிசளித்தார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா அதிமுகவுக்கு தலைவராக பொறுப்பேற்று உள்ளார். சசிகலா தலைமையை அதிமுக தொண்டர்கள் மற்றும் பேச்சாளர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்த்து வந்தனர்.

அப்போது அமைதியாக இருந்த நாஞ்சில் சம்பத்,  ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட இன்னோவா காரை  கடந்த ஆண்டு ஜனவரி 3ந்தேதி அன்று கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர்  சசிகலா அவரை அழைத்து சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, காரை மீண்டும் வாங்கினார்.

ஆனால், தற்போது நாஞ்சில் சம்பம் டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.  அதிமுக  கட்சி, சின்னம் அனைத்தும் சசிகலா எதிர்பாளர்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான நிர்வாகத்திடம் உள்ளது.

அதிமுக தரப்பில் காரை ஒப்படைக்கும் படி சம்பத்துக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அதன் காரண மாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நாஞ்சில் சம்பத், இன்னும் 2 நாட்களுக்குள் காரை ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே கடந்த ஆண்டு இன்னோவா கரை நாஞ்சில் சம்பத் கட்சி தலைமையிடம் ஒப்படைத்தபோது, தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது…..

 

2012 டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சா ரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னி டத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள்.

பிரசாரத்துக்கு மட்டுமே அந்த காரை கட்சியின் பிரச்சா ரத்தை தவிர என்னு டைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும்.

இன்னோவா சம்பத் பழி… இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை, வீணாக அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன்.

என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் இன்னோவா காரை ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.