‘கனா’ படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘விஜய் டிவி’ ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாஞ்சில் சம்பத் ; நான் சினிமாவுக்கு ரொம்ப அந்நியமானவன்.ஒளிப்பதிவாளர் யு.கே. மாதிரி உடை போட்டு நடக்கணும் என்று எனக்கொரு ஆசையுண்டு. அவரை படப்பிடிப்பில் பார்த்துவிட்டேன் என்றால் பூவாக மலர்ந்து விடுவேன்.
இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், வேஷ்டி சட்டை கூட இப்படி இருக்கே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். என்னோட வெளிச்சத்தில் ஒரு பகுதி ‘BLACK SHEEP’ யூ-டியூப் சேனலுக்கு உண்டு.
தனியார் தொலைக்காட்சியில் என்னைக் காயப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘துப்புனா துடைச்சிக்குவேன்’ என்று பதில் சொன்னேன். இந்தப் பாடலைப் பார்த்தப் பிறகு சினிமாவில் இனி நாஞ்சில் சம்பத்துக்கும் இனி முடிவே இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என்று பேசினார்.