சென்னை:

தினகரனின் தீவிர ஆதரவாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், அவரிடமிருந்து விலகினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சமீபத்தில் கட்சியைத் துவங்கினார் தினகர்ன்.

தினகரனை, ‘திராவிட இயக்கத்தை மீட்க வந்த மீட்பர்’ என்றெலாம் பேசி வந்தவர் நாஞ்சில் சம்பத். கட்சிப் பெயரில் திராவிடம் என்பது இல்லாததால் அவர் அதிருப்தியில் இருந்தார். கட்சி பெயர் அறிவிக்கப்பட்ட  மேலூர் கூட்டத்துக்கு தில் நாஞ்சில் சம்பத் வரவில்லை.

இது குறித்து தினகரன் கட்சி வட்டாரத்தினர், “புதிய கட்சியின் பெயரில் எம்.ஜி.ஆர் பெயரும் திராவிடமும் இருக்க வேண்டும். அப்போதுதான் தொண்டர்களிடம் நாம் செல்ல முடியும். ஜெயல்லிதாவை முன்னிறுத்துவது முக்கியம்தான். அதேநேரம், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை நெருங்குவதற்கு எம்.ஜி.ஆர். பெயரும் திராவிடமும் தேவை” என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

ஆனால் தினகரன், ‘ இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். இரட்டை இலையை மீட்கும் வரையில் இந்தப் பெயர் இருக்கும். அதன்பிறகு அ.தி.மு.க. பெயரில்தான் இயங்கப்போகிறோம்” என்று பதில் அளித்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த நாஞ்சில் சம்பத், கட்சி துவக்கவிழா கூட்டத்தை புறக்கணித்தார்.

ஆனால் நாஞ்சில் சம்பத்துக்கு தினகரன் எவ்வளவோ செய்திருக்கிறார்.

‘சென்னை வரும்போதெல்லாம் மல்லிகை விடுதியில் தங்குகிறேன். அந்த விடுதிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கடன் இருக்கிறது என்றார். அதை தினகரன் அடைத்தார்.

நாஞ்சில் மகனுக்கான மருத்துவப் படிப்புச் செலவையும் தினகரன் செய்தார்.

மேலும், பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டையும் ஒதுக்க வைத்தார்.

இதையெல்லாம் மறந்துவிட்டு நாஞ்சில் பேசுகிறார்” என்கிறார்கள்.

இந்த நிலையில் தினகரன் அணியில் இருந்து   விலகிவிட்டதாக  நாஞ்சில் சம்பத்  தெரிவித்துள்ளார். அண்ணாவும் திராவிடம் இல்லாத இடத்தில் தனக்கு வேலை இல்லை என்றும் இனி இலக்கிய மேடைகளில் மட்டும் பேசப்போவதாக தெரிவித்துள்ளார்.