சென்னை:

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்களில்  அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 24 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக மற்றும் காங்கிரஸ், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்பட 46 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  24 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு,  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சா.ராஜநாராயணன் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.