
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ .இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் .
இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சண்டைப் பயிற்சிக்கு இரட்டையர்களாக அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி நடிப்பதாக தகவல்களை நாம் அறிவித்து இருந்தோம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/CTRewZpvg_h/