டில்லி: 180 கி.மீ.வேகத்தில் செல்லும் ‛‛நமோ பாரத்” (ரேப்பிட்எக்ஸ்) ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அந்த அந்த ரயிலில் பயணித்ததுடன், ரயிலினுள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மோடி தலைமையிலான மத்தியஅரசு, ரயில் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. நம் நாட்டின் ரயில் சேவையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிவேக ரயில் சேவைகளையும் இயக்கி வருகிறது. ஏற்கனவே வந்தே பாரத் எனப்படும் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக வந்தேபாரத் ரயில், அதாவது, RapidX ரயில் சேவை இன்று முதன்முதலாக தொடங்கப்பட்டு உள்ளது.
நாட்டின் முதல் பிராந்திய ரயில் ரேபிட்எக்ஸ் (RapidX) ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை காலை 11.15 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரயில் 180 கி.மீ., வேகத்தில் செல்லும் என்பதால் பயண நேரம் குறையும்.
இந்த ரயில்களுக்கு ‘நமோ பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவை, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுதும் உள்ளடக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, தலைநகர் டில்லி, காஜியாபாத், மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த பிராந்திய விரைவு போக்குவரத்து சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியாக சாஹிபாபாதை, துஹாய் டிப்போவுடன் இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘நமோ பாரத்’ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அந்த ரயிலில் பயணித்ததுடன், ரயிலுனுள் ள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
Phot and Video credit: Thanks ANI