சிலம்பரசன் நடிப்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் பத்து தல.

கன்னட படமான மஃ ப்டியின் ரீமேக்கான இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சிம்பு-வுடன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து தல படத்தில் இருந்து ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக சிம்பு பிறந்தநாளான பிப்ரவரி 3 ம் தேதி வெளியாக உள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து பத்து தல படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் சிம்பு ரசிகர்களுக்கு பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு உற்சாகப்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]