சென்னை:

மிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,  வாக்களார் பட்டியலில்  தனது பெயர் இல்லாததால், தனது வாக்கினை பதிவு செய்ய முடியாமல் திரும்பிய நீதிபதி, தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகராறு காரணமாக வாக்குப்பதிவு கால தாமதமானது. அதுபோல, முக்கிய பிரபலங்கள் உள்பட சாமானிய மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்து பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பலர் தங்களது வாக்குகளை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில்,  சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஜெயந்தி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். ஆனால், அவரது  பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி  தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.