மதுரை: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு தடை செய்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகத்தில் கிட்னி திருட்டு உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உடல்உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அதேவேளையில், திருட்டுத்தனமாக உடல் உறுப்புகளை பெறுவதிலும் தமிழக மருத்துவமனைகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக, உடல் உறுப்புகள் தானம் என்பது, மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து, அவர்களின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் பெறப்பட வேண்டும். மேலும், உறுப்புகள் தேவைப்படுவோர், அதற்கான அரசு தளத்தில் பதிவு செய்ய வேண்டியதும் கட்டாயம். அதன்படி, தானம் பெறப்படும் உறுப்புகள், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது.
ஆனால், சமீப காலங்களில், உயிருடன் இருப்போர், ரத்த உறவுகளுக்குள் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளித்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதில் பல பண பேரத்தின் அடிப்படையிலேயே தானம் என்ற பெயரில் உடல் உறுப்புகள் எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதுபோல, ஏழ்மை நிலையில் உள்ள மக்களிடம், அவர்களின் ஏழ்மையை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு பணப்பலன் கிடைக்கும் வகையில், இடைத்தரகர்கள் மூலம் அவர்களிடம் இருந்துஉடல் உறுப்புகளை எடுத்து வருவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நாமக்கம் மாவட்டத்தில் ஏழை நெசவு தொழிலாளர்கள் பலரிடம், சில லட்சம் கொடுத்து ஏமாற்றி சிறுநீரகம் எடுத்த விவகாரம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்காக, ரத்த உறவுகள் போல போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், ”மனித உறுப்புகள் திருட்டு மற்றும் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக கிட்னி திருட்டு விவகாரம் பலருக்கும் பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, மாவட்டத்தில், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வறுமையில் தவித்து வரும் நிலையில், அவர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து கிட்னியை திருடி விற்றதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், இந்த கிட்னி விற்பனை தொடர்பாக அந்த பகுதியில் புரோக்கர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விவாகரம் பெரும் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும், தொழிலாளர்களிம் பேசி, அவர்களை பணிய வைத்து அவர்களின் கிட்னியை சட்டவிரோதமாக எடுத்து வெளியில் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவாகரத்தை கையில் எடுத்த எதிர்கட்சிகள், கண்டனம் தெரிவித்த நிலையி்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தர கோரிக்கை விடுததுள்ளனர். இதனைகயடுத்து, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் கிட்னி திருட்டு: திமுக நிர்வாகி மீது அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு…