சென்னை:

களின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினிக்கு  சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வாரம் பரோல் வழங்கிய நிலையில், இன்று அவர் வேலூர் பெண்கள் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே வந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி கடந்த  28 வருஷங்களை சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர்,  தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி விணணப்பித்திருந்த நிலையில், அவருக்கு ஒரு மாதம் பரோல் கொடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நினலையில், இன்று  வேலூர் மகளிர் சிறையில் இருந்து நளினி பரோலில் வெளியே வந்தார் வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர் என்பவரது வீட்டில் தங்குகிறார் நளினி; நளினியுடன் அவரது தாயார், உறவினர்கள் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அவரது பாதுகாப்புக்காக 24 மணி நேரம் காவல்துறையினர்  வீட்டுக்கு வெளியே காவலில் இருப்பார்கள்.

இதுகுறித்து கூறிய, நளினி தங்கும் வீட்டின் உரிமையாளர்,   சிங்கராயர், நளினி, என் வீட்டில் தங்குவது பெருமையாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.