’’ நாகாலாந்தை ஆள்வது ஆயுத கும்பல்’’ ஆளுநரின் பகிரங்க புகார்..

வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் , தேசியவாத ஜனநாயக முன்னேற்றக் கட்சித் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில் பா.ஜ.க. அங்கம்  வகிக்கிறது.

இந்த நிலையில், அந்த மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.’’ நாகாலாந்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இங்கு மோசமான சூழல் நிலவுகிறது. ஆயுதம் ஏந்திய கும்பல் இந்த மாநிலத்தை ஆள்கிறது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மாநில முதல்வர் நியூ ரியோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

‘’ஆயுதம் தாங்கிய கும்பலின் தினசரி நடவடிக்கைகள், மாநில அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வரும் உப்பு முதல் கட்டுமான பொருட்கள் வரை, இந்த கும்பல் சட்டவிரோதமாக வரி விதித்து வசூலிக்கின்றன’’ என அந்த கடிதத்தில் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

‘’இனியும் இது போன்ற நிகழ்வுகளை  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் ‘’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பா.ஜ.க. கூட்டணி அரசை, மாநில ஆளுநர் பகிரங்கமாக விமர்சனம் செய்திருப்பது, நாகாலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி