நாகப்பட்டினம்:

நாகை  மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளும் பரிசு செய்யப்பட்டுள்ளது.

இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்துத்வா பேசி வரும் பாஜகவைச் சேர்ந்தவர்களே கடவுள்சிலைகைளை நடத்தி விற்பனை செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர்  வேதாரண்யம் மேற்கு ஒன்றியச் பாஜக செயலாளராக இருந்து வருகிறார். இவரது நண்பர் பைரவசுந்தரம் ஆகியோர் அதிகாலையில் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை கைது செய்து விசாரணை நடத்தியபோது, இவர்கள் சிலை கடத்தல் செய்து விற்பனை செய்வது வருவது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் வசம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில்,அவர்களிடம் இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள உலோக அம்மன் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில், அம்மன் சிலையை ரூ.1.20 கோடிக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததும், செல்வம்  வீட்டில் மேலும் சிலைகள் இருப்பதும் தெரிய வந்தது.

அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 நடராஜர் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளையும், ஒரு பீடத்தையும் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 8 சிலை களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

arrested for idol , Multi-crore worth recovered