பரத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நடுவன். ஷராங்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். தரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபர்ணா வினோத் மற்றும் கோகுல் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சசிகுமார் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடுவன் படம் மலைப் பகுதியில் நடக்கும் திரில்லர் திரைப்படமாகும்.

இந்நிலையில் படத்தின் பாடல் வீடியோவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். காலை அதிகாலை எனும் இப்பாடல் வரிகளை கார்க்கி எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.