தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற இருந்தது .கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர்.

வரும் 23-ம் தேதி அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அக்கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதி இல்லை எனவும் மாற்று இடத்தை இன்று தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நடிகர் சங்கத் தேர்தலைப் பற்றி கவலையில்லை. மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார் .