சென்னை,
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அரசியல் பிரமுகர்களை ஆபாசமாக பேசிய ரஜினி ரசிகரை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த ரஜினி பழனி என்பவர் பேசியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் பேசும் நபர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் செல்லூர் ராஜூ, இயக்குநர் கவுதமன் உப்பட பலரை ஆபாசமாக பேசியிருக்கிறார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று இவர்கள் தெரிவிப்பதாகவும் அதனால் அவர்களை தான் எதிர்ப்பதாகவும் அந்த நபர் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார்.
அதில், “முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆபாசமாக மிகவும் கீழ்த்தரமாக பேசியிருக்கும் ரஜினி பழனி என்பவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.