பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிந்துள்ளார்.
“நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம் பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கும் நன்றி.
ஒரு முக்கியமான தமிழ் கவிஞர், சினிமாவிலும் நிறைய எழுதினார். உன் பிரிவால் வாடுகிறேன் நண்பா. புத்தகங்களில் நீ விட்டுச் சென்ற உன் எழுத்துக்களுக்காக நன்றி. பாதி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திருப்பாய் என நம்புகிறேன், இனி உன் படைப்புகளை நாங்கள் அனுபவிக்கப் போவதைப் போல! ” என்று தனது ட்விட்டர் பதிவில் கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.