சென்னை:
றைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் அவரது  உடல் தகனம் நடைபெற்றது.
muthukumar344878-14-1471184690
மஞ்சள் காமாலை மற்றும் மாரடைப்பு காரணமாக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இன்று காலை மறைந்தார்.  அவருக்கு வயது 41.
முத்துக்குமாரின் உடல் அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.