
புதுச்சேரி முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் புதுவை முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி, ஏனாம் தொகுதியில், 28 வயது சுயேட்சை வேட்பாளர் கொல்லபள்ளி சீனிவாஸ் அசோக் என்பவரிடம் 655 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதேசமயம், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான தட்டாஞ்சாவடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சேதுவை தோற்கடித்து, தனக்கான முதலமைச்சர் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை இணைந்து புதுச்சேரியில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel