பெங்களூரூ: 
மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இளங்கலை பட்டம் படித்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி அன்று மாலையில் அவரும், அவருடன் படிக்கும் காதலரும் காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்குச் சென்றிருந்தனர்.
மலை அடிவாரத்தில் இருக்கும் லலிதா திரிபுர பகுதிக்குச் சென்ற அவர்கள்,  காரை நிறுத்திவிட்டுப்  பேசிக் கொண்டிருந்த போது,   6 பேர் திடீரென்று வந்து காதலனைச் சரமாரியாகத்  தாக்கி விட்டு மாணவியை மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  பின்னர் இருவரையும் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்து தூக்கிலிடும்படி கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. கண்டனம் வலுத்து வரும் நிலையில் காவல்துறையும் குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காவல்துறையினர், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பல் பிடிக்க சிசிடிவி கேமரா ஆய்வுகளின்படி தேடி வந்தனர். குற்றம் நடந்த இடத்தில் அலைப்பேசி நெட்வொர்க் மூலம் ஆய்வு செய்ததில்,  குற்றவாளிகள் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.  அவர்களைப் பிடிக்கத் தனிப்படையினர் விரைந்துள்ளனர்.