சிபி சத்யராஜின் ஆக்ஷன் ஃபேன்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் மாயோன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாயோன் படத்தை டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்து, திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.

ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் மாயோன் படத்தின் விறுவிறுப்பான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.