மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் , லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்புக்கு பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுக்கல்லில் துவங்கியுள்ளது.