மைசூர்:
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். அவரது கூட்டாளிகள் அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு, இந்தியாவின் 70வது சுதந்திரத்தினத்தை யொட்டி விடுதலை செய்யப்பட்டனர்.
வீரப்பனுக்கு உதவியாக இருந்ததால் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் காரணமாக சேலம், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டு, பின்னர் வாழ்நாள் தண்டனை விதிக்கப்ப்டடு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
கர்நாடக அரசு, இந்தியாவின் 70வது சுதந்திரதினத்தை அடுத்து நன்னடத்தை விதிகள் படி கைதிகள் 348 பேரை நேற்று விடுதலை செய்தது. அத்துடன் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 18 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த 4 பேரும் 1998-ம் ஆண்டு தமிழக காவல் துறை தலைவர் காளிமுத்து முன்பாக சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.