யாங்கூன்

காத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாளையொட்டி மியான்மர் அரசு புதிய தபால்தலையை வெளியிடுகிறது.

கடந்த 1869 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் நகரில் பிறந்தார்.    இந்திய விடுதலைக்கு அவர் மிகவும்  பாடுபட்டுள்ளார்.   அவருடைய எளிய உடை மற்றும் வாழ்க்கை உலகெங்கும் போற்றப்பட்டு வருகிறது.   வரும்  அக்டோபர் மாதம் அவருடைய 150 ஆம் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி மியான்மர் அரசின் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறை ஒரு புதிய தாஅல் தலையை வெளியிடுகிறது.    மியான்மர் நாணயப்படி 100 கே மதிப்பிலான இந்த தபால் தலையின் விற்பனை  வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கப்படுகிறது.

மியான்மர் நாட்டின் தலைநகர் யாங்கூன் நகரில் உள்ள மத்திய தபால் அலுவலகத்தில் இந்த தபால் தலையின் முதல் விற்பனை தொடங்கப்பட உள்ளது.  அன்று முதலே மியான்மர் நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த தபால் தலை விற்பனைக்கு வர உள்ளது.