மோரே:

ந்திய எல்லைக்குள் நுழைந்து மியான்மர் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மாநிலமான மணிப்பூர், மியான்மர் எல்லையில் உள்ளது. எல்லைப்பகுதியில் உள்ள மணிப்பூர் கிராமமான  ஹலோன்பாய் என்ற  ஊரை, மியான்மர் உரிமை கொண்டாடுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்த மியான்மர் ராணுவம், அங்குள்ள மர அறுவை தொழிற்சாலைகளை சூறையாடி இயந்திரங்களை அள்ளிச் சென்றது. அவற்றை இதுவரை அந்நாட்டு ராணுவம் திருப்பி அளிக்கவில்லை.

இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள் மியான்மர் எல்லைக் கதவுகளை பூட்டி போராட்டத்தில் இறங்கினார்.  மணிப்பூர் மாநில அதிகாரிகள், இதனால் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்படும் என்பதை  கூறியதை அடுத்து  எல்லைக் கதவுகளை  மக்கள் கதவுகளைத் திறந்துவிட்டனர்

ஆனால் மியான்மர் ராணுவம் மீண்டும் வந்து கதவுகளை பூட்டிவிட்டுச் சென்றது. இதனால் இருநாடுகளிடையேயான எல்லைப் போக்குவரத்து முழுவதுமாக முடங்கிவிட்டது..

ரஜெம் லொபரட்டரிஸ் உடன், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்