சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும், அமைச்சர்கள் 95% அறிவிப்புகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்; நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது, திமுக அரசின் சாதனைகள் உள்பட பல்வேறு விளங்களை தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன், ஆனால், சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான கருத்தை தெரிவிக்கிறார். அவர் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது.
தமிழக வளர்ச்சிக்காக திமுக அரசு 52 குழுக்களை அமைத்ததாக கூறியது. அந்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன? என கேள்வி எழுப்பியதுடன், உலக முதலீட்டாளர் மாநாடு, அதன்மூலம் கிடைத்த பலன் என்ன என்பது வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம், முதலீட்டாளர் மாநாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு திமுக அரசு பதில் தரவில்லை என்றும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழை வெள்ளம் தொடர்பான செலவினம் குறித்து கேள்வி எழுப்பினோம், அதற்கும் தமிழ்நாடு அரசிடம் இருந்து பதில் அளிக்கவில்லை என்று சுட்டி காட்டியதுடன், “குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத்தொகை கிடைக்கவில்லை, கூட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்கள் 95% அறிவிப்புகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்;
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்க வில்லை; உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான முழு விவரங்களும் பதிலுரையில் இடம்பெறவில்லை”,
நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும், கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 97% அறிவிப்புகளை திமுக நிறை வேற்றியதாக பொய் சொல்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை,
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை பெறாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டிய எடப்பாடி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.63ஆயிரம் கோடிக்கு அடிக்கல் நாட்டினோம் என்றவர், வேற்றவில்லை; திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.